‘நீட்’ தேர்வுக்கு இலவச ‘ஆன்-லைன்’ பயிற்சி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
‘பெபில்ஸ் இன்போடெயின்மென்ட்’ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் என்.ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ‘நீட்’ தேர்வுக்கான உயிரியல் பாட விளக்கங்கள் மற்றும் வினா-விடைகளை கற்பதற்காக ‘பெபில்ஸ் சி.பி.எஸ்.இ.’ என்ற ‘யூடியூப்’ சேனலை அறிமுகம் செய்துள்ளோம். இந்த பயிற்சி இலவசம் ஆகும். 100 மணி நேரம் இந்த பயிற்சி வழங்கப்படும். ‘யுடியூப்’ வீடியோவில் படங்கள், தீர்வுகள் மூலம் மாணவர்கள் வகுப்பறையில் கேட்டு தெளிவு பெறுவது போன்று எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் வினா-விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனிக்கும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைப்புடன் 10 பிரிவுகளில் பாட தலைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் பிராணிகளின் அமைப்பு, செல்லின் அமைப்பு-இயக்கம், தாவர இயங்கியல், உடல் இயங்கியல், இனப்பெருக்கம், மரபியல் மற்றும் படிநிலை வளர்ச்சி, மனித நலத்தில் உயிரியலின் பங்கு, உயிரி தொழில்நுட்பம், சூழலியல் ஆகிய தலைப்புகளில் பாடங்கள், வினா-விடைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments