அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்கிறது. சைதை துரைசாமியை தலைவராக கொண்டு இயங்கும் மனிதநேய மையம் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சமூகநல பணிகளை ஆற்றி வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட பல்வேறு மத்திய-மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இதுவரை நடந்த தேர்வுகளில் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 3,125 பேர் மாநில மற்றும் தேசிய அளவில் உயர் பதவிகளில் உள்ளனர். இதுமட்டுமின்றி, சிவில் நீதிபதி பதவிகளுக்கு 2012-ல் 38 பேரும், 2015-ல் 57 பேரும், மாவட்ட நீதிபதி பதவிகளுக்கு 2013-ல் 5 பேரும் என மொத்தம் 100 பேர் மனிதநேய மையத்தில் படித்து வெற்றிபெற்று, தற்போது சிவில் மற்றும் மாவட்ட நீதிபதிகளாக உள்ளனர். இலவச பயிற்சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 9-ந்தேதி அறிவித்துள்ள 320 சிவில் நீதிபதி பதவிகளுக்கு ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற உள்ள முதல்நிலைத் தேர்வுக்கும் மற்றும் ஆகஸ்டு மாதம் 11 மற்றும் 12-ந்தேதி நடைபெறும் முதன்மை எழுத்து தேர்வுக்கும் மனிதநேய மையமும், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் சங்கமும் இணைந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை எண்.28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35 என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேய மையத்தை நேரில் அணுகலாம். இதேபோல 044-24358373 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, Fa-c-e-b-o-ok pa-ge Li-nk Ma-n-i-d-ha na-ey-am Fr-ee IAS Ac-a-d-e-my என்ற முகநூல் பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து, ad-m-iss-i-on.mnt-f-r-e-e-ias@gm-a-il.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பி பதிவு செய்துகொள்ளலாம். இந்த தகவலை மனிதநேய மையத்தின் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Comments