உதவி வனப் பாதுகாவலர் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

உதவி வனப் பாதுகாவலர் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உதவி வனப்பாதுகாவலர் பதவியில் 14 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்-1-ஏ முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நடத்தப்பட்டது. அத்தேர்வில் 10,459 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். முதல்நிலைத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் முதன்மைத்தேர்வுக்கு 472 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. முதன்மைத்தேர்வு ஜுலை 28 முதல் ஆகஸ்டு 4-ம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடை பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||