இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
இந்திய விஞ்ஞான மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் நிறுவனம் இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம். தற்போது இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். குறிப்பிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக், எம்.இ, எம்.டெக் மற்றும் பிஎச்.டி. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://www.iip.res.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5-5-2018-ந் தேதி கடைசி நாளாகும்.

Comments