அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் மருந்து தயாரிக்கும் உதவியாளர் (மருந்து செய் உடனாளர்) பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் மருந்து தயாரிக்கும் உதவியாளர் (மருந்து செய் உடனாளர்) பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் மருந்து செய் உடனாளர் பணியிடத்துக்கு 25 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18. ஆதிதிராவிடர், அருந்ததியர் வகுப்பினருக்கான அதிகபட்ச வயது 35. பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் - பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் - முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு அதிகபட்ச வயது 3. பொதுப்பிரிவினர், பொதுப்பிரிவினர் - பெண்களுக்கு அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு அடிப்படை ஊதியம் ரூ.16 ஆயிரத்து 600. விவரங்களுக்கு, கண்காணிப்பாளர், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, அரும்பாக்கம், சென்னை-600106 என்ற முகவரியில் அணுகலாம். விண்ணப்பம் ஏப்.16 முதல் 20-ம் தேதி வரை வழங்கப்படும். ஏப்.27 விண்ணப்பிக்க கடைசி நாள்.

Comments