'நீட்' தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை வீட்டுக்கே இலவசமாக அனுப்புகிறது ‘லிம்ரா’

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
'நீட்' தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை வீட்டுக்கே இலவசமாக அனுப்புகிறது ‘லிம்ரா’ ‘நீட்' நுழைவுத் தேர்வை எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளை வீட்டுக்கே அனுப்புகிறது லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம். இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பில் சேர, அகில இந்திய அளவில் 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எதிர்கொள்ள காத்திருக்கும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளை, சென்னையில் வெளிநாட்டு மருத்துவக் கல்வி வாய்ப்புகளை பெற்றுத்தருவதில் முன்னணியில் உள்ள லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் கட்டணம் ஏதுமின்றி வீட்டுக்கே கூரியர் மூலம் அனுப்புகிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த வினாத்தாள் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களிலும், பொது அறிவு மற்றும் ஆளுமைத் திறன் ஆகிய பிரிவுகளிலும் 180 கேள்விகள் கொண்டதாக இருக்கும். இது நீட் தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவியாக இருக்கும். வினாத்தாளை பெற மாணவர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரியை 9952922333 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப லாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments