TNPSC குரூப் 5 ஏ பணி ஏப்.5-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் 5 ஏ பணி ஏப்.5-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: தமிழக அரசின் அமைச்சுப் பணி மற்றும் நீதித்துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக பணியாற்றி வருவோர் தலைமைச் செயலகத்தில் நிதி மற்றும் சட்டம் அல்லாத இதர துறைகளில் உதவியாளர்களாக பணிமாறுவதற்கான (54 காலியிடங்கள்) குரூப்-5-ஏ தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி நடந்தது. இத்தேர்வின் முடிவுகள் மார்ச் 16-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த நிலையில், இப்பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments