UGC NET 2018 - நெட் தேர்வு : விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாளாகும்.

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
UGC NET 2018 - நெட் தேர்வு : விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாளாகும். | கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (ஏப்.12) முடிவடைய உள்ளது. இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி - பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இதில் நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டிருந்தது. அதன்படி, தேர்வானது ஜூலை 8 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாளாகும். கட்டணம் செலுத்த ஏப்ரல் 13 கடைசி நாளாகும்.இரண்டு தாள்கள் மட்டுமே...இந்தத் தேர்வில் இதுவரை மூன்று தாள்கள் இடம்பெற்றிருந்தன. 2018 -ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. | CLICK

Comments