குரூப்-2 தேர்வுக்கான 3-வது கட்ட கலந்தாய்வு

குரூப்-2 தேர்வுக்கான 3-வது கட்ட கலந்தாய்வு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் மே 29-ல் நடைபெறுகிறது குரூப்-2 தேர்வுக்கான 3-வது கட்ட கலந்தாய்வு மே 29-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவி்த்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளில் 2014-2016-ம் ஆண்டுகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வின் (நேர்காணல் உடைய பதவிகள்) 3-வது கட்ட கலந்தாய்வு மே 29-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் (தமிழ்வழியில் படித்தவர்கள்) ஆகிய பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கைத்தறி ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) பதவிகளில் உள்ள காலியிடங்கள் ரேங்க் அடிப்படையில் நிரப்பப்படும். வருவாய் ஆய்வாளர் பதவியில் உள்ள காலியிடங்கள் இதுவரை ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படாத விண்ணப்பதாரர்களைக் கொண்டு மட்டுமே நிரப்பப்படும். கட் ஆஃப் மதிப்பெண் பட்டியல் விண்ணப்பதாரர்கள் ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் (மொத் தம் 133 பேர்). அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலும் கட் ஆஃப் மதிப்பெண் பட்டியலும் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. உத்தரவாதம் இல்லை கலந்தாய்வு குறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே தகவல் அனுப்பப்படும். இந்த பட்டியலில் இடம்பெறாமல், ஏற்கெனவே ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படாத விண்ணப்பதாரர்களும் தகுதி இருந் தால் கலந்தாய்வில் (பேரூராட்சி செயல் அலுவலர், கைத்தறி ஆய்வாளர் பதவிகள் தவிர) கலந்துகொள்ளலாம். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே பணி கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments