இன்று (26.05.2018) சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு

இன்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5-ம் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும் 11 லட்சத்து 88 ஆயிரத்து 144 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களையும், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் டையு ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய மண்டலத்தில் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படுவதை சிபிஎஸ்இ அதிகாரிகளும் உறுதிபடுத்தினர். தேர்வு முடிவுகள் மதியம் 12 மணியளவில் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||