புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை தொடக்கம்.

புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை தொடக்கம் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை நேற்று தொடங்கியது. பிளஸ் 1 புத்தகங்கள் ஜுன் 2-வது வாரம் விற்பனைக்குக் கிடைக்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்) வழங்க வசதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் விற்பனை நேற்று தொடங்கியது. 11-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜுன் 2-வது வாரத்தில் பள்ளிகள் தொடங்கும் முன்பு விற்பனை செய்யப்படும். புதிய பாடப்புத்தகங்கள் மேலட்டைகள் சிறந்த முறையில் அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்து புதுப்பொலிவுடன் கியூ.ஆர். உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்கள் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments