SSLC மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.

தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அரசு தேர்வு துறை அறிவிப்பு தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்படும் என அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மறுகூட்டல் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு எழுதிய பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23-ந் தேதி வெளியிடப்பட்டது. விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை (சனிக்கிழமை) மாலை 5.45 மணி வரை தங்கள் பள்ளிக்கூடம் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இயல்பு நிலை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள வசதி நிறுத்தம் மற்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அந்த மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு, அங்கு இயல்பு நிலைக்கு திரும்பிய அடுத்த நாளில் இருந்து 3 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படும். இது குறித்து உரிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். எனவே மாணவ-மாணவிகள், பெற்றோர் பதற்றம் கொள்ள தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments