1, 2-ம் வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் கிடையாது

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1, 2-ம் வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் கிடையாது மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது சென்னை, ஜூன்.4- சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த தீர்ப்பின் எதிரொலியாக 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதை நிறுத்த வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டுவர இருப்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். ஐகோர்ட்டில் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள பாடப்புத்தகங்களை மட்டுமே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வாங்கி மாணவர்களுக்கு வழங்கவேண்டும். ஆனால் இதை பின்பற்றாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து புத்தகங்களை பெற்று மாணவர்களுக்கு வினியோகம் செய்கின்றன. இதனால் மாணவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்’ என்று கூறியிருந்தார். என்.கிருபாகரன் தீர்ப்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ‘தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள பாடப்புத்தகங்களை மட்டுமே தனியார் பள்ளிகள் வாங்க வேண்டும். குழந்தைகள் பாடங்களை புரிந்து, விருப்பத்துடன் மட்டுமே படிக்கவேண்டும். விதிகளின்படி 1 மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மொழி மற்றும் கணித பாடங்களையும், 3 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மொழி, கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் பாடங்களை மட்டுமே கற்றுத்தர வேண்டும். சி.பி.எஸ்.இ. மட்டுமின்றி மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது’ என்று நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். வீட்டுப்பாடம் கிடையாது இந்த நிலையில் நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: - சென்னை ஐகோர்ட்டு உத்தரவை வரவேற்கிறேன். அந்த உத்தரவை படித்து வருகிறோம். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதை கண்டிப்பாக அமல்படுத்துவோம். 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்பதற்கு விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படும். குழந்தைகள் கல்வியை மகிழ்ச்சியுடன் கற்கவேண்டும். கல்வி என்பது அவர்களுக்கு மன உளைச்சலை தரக்கூடாது. எந்த அளவு குழந்தைகளுக்கு கல்வியில் தேவையில்லாத பளுவை குறைக்கமுடியுமோ, அதை நிச்சயம் குறைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments

 1. தினகரன்
  தஞ்சாவூர்
  2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்
  4 June 2018, 2:04 am
  பட்டுக்கோட்டை, ஜூன் 4: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்ைக விடுத்துள்ளது. தமிழக அரசுக்கு தமிழ்நாடு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணிவாய்ப்பு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனே பணி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

  அதை ஏற்று உடனடியாக 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.


  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 40 என்று உள்ளதை 1: 30 என்று உருவாக்கினால் மட்டுமே கூடுதலான ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏற்படும். படித்து முடித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொடக்க கல்வியில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 30 என்று உள்ளது.

  இதேபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், மாணவர் விகிதம் 1: 30 என உருவாக்க வேண்டும். 2013ல் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்கள் அந்த தேர்ச்சி சான்றை வைத்து கொண்டு 7 ஆண்டுகளுக்குள் மட்டுமே பணிவாய்ப்புகள் பெற முடியும். தற்போது 5 ஆண்டுகள் கடந்து விட்டதால் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணி கிடைத்தால் மட்டுமே அந்த தேர்ச்சி சான்று பயன்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்றும் இதுவரை ஆசிரியர் பணி பெற முடியாத ஆசிரியர்கள் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர். எனவே தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

  தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் காலி பணியிடங்களை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை கொண்டே ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு துரிதமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது. பிஎட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை ç ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 40 என்று உள்ளதை 1: 30 என்று உருவாக்கினால் மட்டுமே கூடுதலான ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏற்படும். படித்து முடித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொடக்க கல்வியில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 30 என்று உள்ளது.

  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  2013 ஆசிரியர் தகதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்காக குரல்கொடுத்த தமிழ்நாடு பிஎட் பட்டதாரி ஆசிரியர் சங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
  🙏💐💐💐💐

  இவண்
  2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
  வடிவேல் சுந்தர்
  மாநில தலைவர்


  ம.இளங்கோவன்
  மாநில ஒருங்கிணைப்பாளர்
  8778229465

  ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||