தட்கல் முறையில் 11, 12-ந்தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு, பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தட்கல் முறையில் 11, 12-ந்தேதிகளில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வெழுத கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு தேர்வை அல்லது பிளஸ்-2 பொதுத்தேர்வினை பள்ளி மாணவ-மாணவிகளோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் வருகைபுரியாதவர்கள் அனைத்துப் பாடங்களையும் உடனடித்தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தட்கல் திட்டத்தில் அனுமதிக்கப்படும் தேர்வர்களுக்கு திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||