தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு ஜூன் 11 முதல் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டது. இந்நிலையில் தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2018-19ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் 16-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரியில் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியலை வரும் 28-ம் தேதி வெளியிடவும், கலந்தாய்வை ஜூலை 7-ம் தேதி தொடங்கவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Comments