ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 12-ல் தொடக்கம் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு ஜுன் 12 முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு வருகிற 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜுன் 7-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். பொது மாறு தல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜுன் 12-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி கூறும்போது, “அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜுன் 11 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதற்கு வட்டாரக் கல்வி அலுவலகத்தில் 7-ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்” என்றார். CLICK

Comments