தொலைதூரக்கல்வி படிப்புகளில் ஜூலை 15 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூரக்கல்வி படிப்புகளில் ஜூலை 15 வரை சேரலாம் என்று இக்னோ பல்கலைக்கழகம் அறி வித்துள்ளது. இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை, இளங்கலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. பிளஸ் 2 முடிக்காத, 18 வயது நிரம்பியவர்கள் பட்டப் படிப்பில் சேர வகை செய்யும் 6 மாத கால இளங்கலை முன்தயாரிப்பு படிப்பும், சிஏ, ஏசிஎஸ், ஐசிடபிள்யூஏ படித்துக்கொண்டிருப்பவர்களுக்காக சிறப்பு பி.காம். படிப்பும் வழங்கப்படுகிறது. இளங்கலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்பில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எவ்வித கல்விக்கட்டணமும் செலுத்த தேவை யில்லை. 2018-ம் ஆண்டின் ஜூலை பருவ மாணவர் சேர்க்கையின்கீழ் மேற்குறிப்பிட்ட படிப்புகளில் ஜூலை 15-ம் தேதி வரை சேரலாம். ஆன்லைன் (www.ignou.ac.in) மூலமாகவும் மாணவர் சேர்க்கை செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ள லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments