எம்பிபிஎஸ் விண்ணப்ப விநியோகம் இன்று 18.6.2018 நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று 18.6.2018 மாலை 5 மணியுடன் முடிகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை 19.6.2018 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனி யார் மருத்துவம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. 36,961 விண்ணப்பங்கள் அரசு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.500-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.1,000-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும் நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ, மாணவிகள் பெற்றுச் செல்கின்றனர். அரசு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் மற்றும் பழங்குடியின வகுப் பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் சாதிச் சான்றிதழ் நகல் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்று வருகின்றனர். நேற்று வரை 36,961 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் விண்ணப்ப விநியோகம் இன்று மாலை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு நாளை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments