பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம், வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

B.Ed படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன்–21ல் தொடக்கம்! பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம், வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இரண்டு ஆண்டு பி.எட், பட்டப்படிப்பில் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பி.எட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 21ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. சென்னை விலிங்டன் பி.எட். கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 13 பி.எட். கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஜூன் 30ந் தேதி வரை பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பிஎட் விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 500/-, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3, மாலை 5 மணிக்குள் கீழ் உள்ள முகவரியை சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5

Comments