ஐடிஐ-களில் சேர ஜூன் 27-க்குள் விண்ணப்பம்

ஐடிஐ-களில் சேர ஜூன் 27-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனமாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதவது: சென்னை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட அளவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தகுதியுள்ள மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு www.skillstraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் தொழிற்பயிற்சி பாடப்பிரிவுகள், கல்வித்தகுதி, இடஒதுக்கீடு போன்ற விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 27-ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு 044-22501530 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

Comments