மத்திய அரசின் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கு 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் அறிவிப்பு

மத்திய அரசின் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) பல்வேறு டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை நடத்தி வருகிறது. அதன் அடிப் படையில், நடப்பு 2018-19-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஒப்புதல் பெற்ற டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகாலம் கொண்ட முதுநிலை டிப்ளமோ படிப்புகளான பிளாஸ்டிக் பதனீட்டுத் தொழில்நுட்பம், பிளாஸ்டிக் ஆய்வு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆகியவற்றில் சேருவதற்கு வேதியியலை ஒரு பாடமாகக் கொண்ட மூன்றாண்டு பி.எஸ்சி., அறிவியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். காட் பயிற்சியுடன் கூடிய பிளாஸ்டிக் வடிவமைப்பு படிப்பில் சேருவதற்கான கல்வித் தகுதி இயந்திரவியல், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், கருவி மற்றும் உற்பத்திப் பொறியியல், மெக்கட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், கருவி மற்றும் வார்ப்பியல் ஆகிய 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள் மற்றும் சிபெட்டில் டிபிஎம்டி மற்றும் டிபி ஆகிய படிப்பு களையோ அவற்றுக்கு இணையான படிப்புகளையோ முடித்தவர்கள் தகுதி பெற்றவர் கள் ஆவர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பிளாஸ்டிக் அச்சுவார்ப்பியல் தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் ஆகிய மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் சேர, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்குமேல் படித் திருக்க வேண்டும். சிபெட் நிறுவனத்தில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் லேட்டரல் முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புகளில் சேரலாம். மேற்கண்ட படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு குறித்து விவரங்களை அறிய www.cipet.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். வரும் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. நுழைவுத் தேர்வு ஜூலை 1-ம் தேதியன்று நடைபெறும். இதுகுறித்து, கூடுதல் விவரங்கள் அறிய எம். பீர்முகமது (9677123882), ஜி. சுரேஷ் (9444699936) ஆகியோ ரைத் தொடர்பு கொள்ளலாம் என மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

Comments