32 மாவட்டங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி மையம் | தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 32 மாவட்டங்களி லும் ‘ஐஏஎஸ் பயிற்சி மையங்கள்’ விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார். அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினர் புலவர் வே. பதுமனார் வரவேற்றார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி முன்னிலை வகித்தார். விஐடி வேந்தரும் அறக்கட்டளை தலைவருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசும்போது, “அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பெற வேண் டும் என்ற நோக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளில் 3,919 மாணவர்கள் அறக்கட்டளை மூலம் பயன் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ரூ.80 லட்சம் கல்வித் தொகை வழங்கப்பட உள்ளது” என்றார். தமிழகத்தில் கல்வி புரட்சி இதையடுத்து, அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி பேசும்போது,  “உயர் கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழக பாடப் புத்தகங்கள் யாராலும் மிஞ்ச முடியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி எந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும் தமிழக மாணவர் கள் எளிதாக எதிர்கொள்ளவே 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நீட் தேர்வுக் கான பயிற்சி வகுப்புகள் மாவட்டந்தோறும் தொடங்கப்படும். அடுத்த நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 1,000 பேர் தேர்ச்சி பெறக் கூடிய வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் 5,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஐஏஎஸ் பயிற்சி அகா டமி தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மாவட்டந்தோறும் நடமாடும் நூலகங்கள் அமைக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது. தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகி றது” என்றார். நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments