திருவள்ளூர் கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

வருவாய் மாவட்டத்தில், , பொன்னேரி என 2 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், தமிழக அரசு கல்வித் துறை யில் மேற்கொண்டுள்ள மாற்றங்களால் மாவட்டத் தின் கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மற்றும் நர்சரி பள்ளிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவை, திருவள்ளூர் மற்றும் பொன்னேரி மாவட்டக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கல்வித் துறை யில் நிர்வாக வசதிக்காக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகிய பதவிகளை எடுத்தல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது அம்பத்தூர், ஆவடி, திருத்தணி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. ஏற் கெனவே உள்ள திருவள்ளூர், பொன்னேரி சேர்த்தால் 5 கல்வி மாவட்டங்களாக உயர்ந்துள்ளன. இதில், திருவள்ளூர் கல்வி மாவட்டத்தின் கீழ் திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளும், திருத்தணி கல்வி மாவட்டத்தின் கீழ், திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகளும் செயல்படத் தொடங்கியுள்ளன. அதேபோல் பொன்னேரி கல்வி மாவட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகளும், அம்பத்தூர் கல்வி மாவட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளும், ஆவடி கல்வி மாவட்டத்தின் கீழ் பூந்தமல்லி, எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகளும் செயல்படுகின்றன. இந்த 5 கல்வி மாவட்டங் களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆவடி-காமராஜர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகம் ஆகியவற் றில் செயல்படத் தொடங்கி உள்ளன. மேலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும், ஒரு வட்டார கல்வி அதிகாரி செயல்படத் தொடங்கியுள்ளார். இந்த மாற்றங்களால், திருவள்ளூர் வருவாய் மாவட்டம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி, மெட்ரி குலேஷன் மற்றும் நர்சரி பள்ளிகளை மெட்ரிகுலேஷன் ஆய்வாளர் ஒருவரே கண்காணிப்பதில் இருந்து வந்த பல்வேறு சிக்கல்கள் தவிர்க்கப்படும். அதுமட்டுமல்லாமல்,வருவாய் மாவட்டத்தின் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துதல், தனியார் பள்ளிகள் தொடர்பான புகார்கள் மீதான நடவடிக்கை உள்ளிட்டவற்றை துரிதமாக மேற்கொள்ள முடியும்; தேர்ச்சி விகிதமும் அதி கரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments