‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை கொண்டு நிரப்பியது செல்லாது ஐகோர்ட்டு உத்தரவு

தனியார் மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை கொண்டு நிரப்பியது செல்லாது ஐகோர்ட்டு உத்தரவு | ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, 2016-17-ம் கல்வியாண்டு முதல் மருத்துவப்படிப்பில் சேர முடியும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில், காஞ்சீபுரத்தில் உள்ள பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரி, கடந்த 2016-17-ம் கல்வியாண்டில், நிரப்பப்படாமல் இருந்த 36 அரசு ஒதுக்கீட்டு இடங்களை கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பிக்கொண்டது. அவ்வாறு மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், அவர்களது சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க மருத்துவ கல்வி கவுன்சில் மறுத்தது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகமும், பாதிக்கப்பட்ட மாணவர்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதனை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்தனர். இதன்படி, இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு அளித்தது. அதில், ‘காலியாக இருந்த அரசு ஒதுக்கீட்டு இடத்தை, ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை கொண்டு நிரப்பியது சட்டப்படி செல்லாது’ என்று கூறியுள்ளனர்.

Comments