கணக்கும் இனி கனியாகும்

மாணவர்களுக்கு கணக்கும் இனி கனியாகும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருவிதமான கணக்கு தேர்வுகள்: 9 முதல் 12ம் வகுப்பு வரை அமல்படுத்த பரிசீலனை. கணக்கில் புலியாக இருப்பவர்களுக்கு ஒரு தேர்வும், மற்றவர்களுக்கு ஒரு தேர்வுமாக இருவிதமான கணக்கு பாடத்தை போதிக்கவும், தேர்வுகளை நடத்தவும் சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருவிதமான கணித தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ வாரியத்தில் பரிசீலனை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் கணக்கு பாடத்தில் சிரமப்படுகின்ற மாணவர்களுக்கு எளிதான பாட திட்டமும், எளிய தேர்வு முறையும் இடம்பெறும். சிபிஎஸ்இ நியமித்துள்ள உயர்மட்ட குழுவும், சிபிஎஸ்இயின் குழுவும் இணைந்து பரிசீலனை செய்து வருகிறது. இருப்பினும் யுஜிசியின் முடிவு அடிப்படையில் இந்த பாடதிட்ட முறை செயல்பாட்டிற்கு வரும். கணக்கு சார்ந்த படிப்புகளில் மேற்படிப்புகள் தேவையில்லை என்று கருதுகின்ற மாணவர்கள், மருத்துவம், வரலாறு போன்ற பாடங்களில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இந்த முறை பயனுள்ளதாக இருக்கும். அதே வேளையில் மாணவர்களுக்கு அடிப்படை கணித பாட திட்டங்களை கண்டிப்பாக பள்ளிகளில் போதித்து ஆக வேண்டும். மேற்படிப்புகளில் கணித பாடத்திட்டத்தில் வேறுபாடுகளை கொண்டுவரலாம். இல்லையெனில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக எளிதான பாட திட்ட முறையை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Comments