எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு ஒரு வாரத்தில் தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு ஒரு வாரத்தில் தொடக்கம். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக் கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த மே மாதம் 6-ம் தேதி நடந்தது. இந்த நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. மருத்துவம் படிக்க 7 லட்சத்து 14 ஆயிரத்து 562 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படும் 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்னும் ஒரு வாரத்தில் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 500 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்துகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிந்தவுடன் தமிழகத்தில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 85 சதவீத இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை ஜூலை 1-ம் தேதி தொடங்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||