அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சி.ஏ. பயிற்சி கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

அரசுப் பள்ளி வணிகவியல் மாணவர்களுக்கு சி.ஏ. தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது தொடர்பாக கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறையும் இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, மாநிலம் முழுவதும் 1000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்வுசெய்யப்படும். ஒரு பள்ளியில் 50 மாணவர்கள் வீதம் 50 ஆயிரம் மாணவர்களுக்கு சி.ஏ. தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு திட்டம் தொடங்கப்படுவது நாட்டிலேயே முதல் முறை. அனுபவம் வாய்ந்த மூத்த ஆடிட்டர்கள் பயிற்சி அளிப்பார்கள். சி.ஏ. தேர்வு குறித்து 9-ம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக ஒன்றரை லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த புதிய திட்டம் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இத்திட்டம் மாணவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக அமையும் என்று இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனத்தின் கோவை கிளை தலைவர் ஆடிட்டர் ஜலபதி கூறினார். சி.ஏ. பயிற்சி நிறுவன நிர்வாகிகள் கூறும்போது, “பொறியியல், மருத்து வம் போல சி.ஏ.வும் தொழில்படிப்புதான். படிப்பதற்கான செலவு குறைவு. படிக்கும்போதே ரூ.8 ஆயிரம் வரை உதவித்தொகை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு” என்றனர்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||