சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத் தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத் தேர்வு 23.09.2017 அன்று நடத்தப்பட்டது. விண்ணப்பித்த 37952 நபர்களில் 35781 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினார்கள். இதற்கான தற்காலிக விடைக்குறிப்பு 13.10.2017-ல் வெளியிடப்பட்டு ஆட்சேபணைகள் இருப்பின் 20.10.2017 க்குள் எழுத்துப் பூர்வமாக உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பாட வல்லுநர்களைக் கொண்டு கூர்ந்தாய்வு செய்யப்பட்டு கவனமாக இறுதி விடைக்குறிப்பு தயார் செய்யப்பட்டு, அதன்படி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இறுதி விடைக்குறிப்பும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.கிளிக்

Comments

  1. librarian also special category teachers.why neglected library science category exam.

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||