விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக மொத்தம் 14 கல்லூரி விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் 9 விடுதிகள் மாணவர்களுக்காகவும், 5 விடுதி கள் மாணவியருக்காகவும் நடத்தப்படுகின்றன. இவற்றில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேரலாம். இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர் குறிப்பிட்ட விகிதாச் சார அடிப்படையில் சேர்க்கப்படுவர். உணவும், தங்குமிடமும் இலவசம். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத் தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியருக்குப் பொருந்தாதது. தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினி கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத் தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விடுதியில் சேரும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Comments