கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்

கால்நடை மருத்துவ படிப்புக்கு பதிவு செய்தவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் இதுவரை 14,525 பேர் விண்ணப்பித்துள்ளனர் கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் விண்னப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 360 இடங்கள் இருக்கின்றன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக, மாநில அரசுக்கு 306 இடங்கள் (85 சதவீதம்) உள்ளன. இதேபோல் பிடெக் படிப்புகளுக்கு 94 இடங்கள் இருக்கின்றன. இந்த படிப்புகளுக்கு 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது மே 21-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. ஜூன் 11-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. கால்நடை மருத்துவப் படிப்புக்கு 12,107 பேரும், பிடெக் படிப்புகளுக்கு 2,418 பேரும் என மொத்தம் 14,525 பேர் விண் ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாக வரும் 18-ம் தேதி (நாளை) மாலை 5.45 மணிக்குள் ‘தலைவர், சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600051ல் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments