ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நவீன உபகரணங்கள் இங்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புகழ்பெற்ற இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் விரும்புவார்கள். இந்த கல்லூரியில் மாணவர்களை சேர்க்க தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. புதுவை ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மொத்தம் 200 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதில் காரைக்காலுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 150 இடங்களுக்கு புதுச்சேரி உள்பட இந்தியா முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்கள் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு கல்லூரியில் சேர்க்கப்படுவார்கள். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து 1 லட்சத்து 97 ஆயிரத்து 751 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான நுழைவுத் தேர்வு கடந்த 3-ந் தேதி 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் காலை மற்றும் மதியம் என 2 பிரிவுகளாக நடந்தது. காலையில் ஒரு லட்சத்து ஆயிரத்து 321 மாணவர்களும், மதியம் 96 ஆயிரத்து 424 மாணவர்களும் தேர்வு எழுதினார்கள். இந்தநிலையில் நேற்று மாலை ஜிப்மரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ( www.jipmer.puducherry.gov.in / www.jipmer.edu.in) எம்.பி.பி.எஸ். நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அகில இந்திய அளவில் அன்கதல அனிருத் பாபு (99.9987) முதல் இடமும், அகில் தம்பி (99.9986) 2-ம் இடமும், பிரேராக் திரிபாதி (99.9975) 3-ம் இடமும், அமிதாப் பங்கஜ் சவுகான் (99.9973) 4-ம் இடமும், சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா (99.9963) 5-ம் இடமும் பிடித்துள்ளனர். இதேபோல் புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டு பிரிவில் அக்‌ஷய் (99.7083), விக்னேஷ் ராமன் (99.560), ரக்‌ஷா (98.877), சரவணன் (98.603) ஹர்ஷிதா (98.524) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். முதற்கட்ட கலந்தாய்வு இம்மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. ஜூலை 4-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||