tanuvas.ac.in | 11-ந் தேதி வரை கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு..

தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பில் சேர ஆன்லைன் ( www.tanuvas.ac.in) மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை 10,373 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க கடைசி நாள் 6-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது 11-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தலைவர், சேர்க்கைக்குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51 என்ற முகவரிக்கு 18-ந் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments