TNPSC - Counselling for the Post of Store Keeper included in Group - III A Services.

TNPSC - Counselling for the Post of Store Keeper included in Group - III A Services. TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION The Tamil Nadu Public Service Commission in its notification dated 17.05.2013 had invited applications for appointment by direct recruitment to the posts of Store Keeper (Non - Oral Test Posts) included in Group-III A Services. The Written examination was held on 03.08.2013 FN and results were published on 14.03.2018. In order to fill up the 20 vacancies, III phase of Certificate verification / I Phase of Counselling for the post of Store Keeper is to be held on 27.06.2018 at 8.30 A.M. /10.00 A.M. respectively in the O/o. Tamil Nadu Public Service Commission, TNPSC Road, V.O.C. Nagar, Chennai-600 003. Candidates are informed individually by speed post / SMS / E-mail about the date and time of the Certificate verification / Counselling. Candidates are admitted to the Certificate verification / Counselling in the ratio of 1:2 based on the marks obtained in the Written Examination, Rank and claims made by them in their On-line applications. The allotment to the posts is subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. Hence, mere calling for Certificate verification / counselling itself will not confer him/her to claim any right on the post. Candidates who do not appear for Certificate verification / Counselling on the date and time allotted to them will loose his/her opportunity in the combined merit list and they will not be given any further chance to appear for the same. | தொகுதி - III A-ல் அடங்கிய பண்டகப் பொறுப்பாளர் பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 17.05.2013 நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) எழுத்துத் தேர்வு கடந்த 03.08.2013 அன்று முற்பகல் நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 14.03.2018 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான 20 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு மூன்றாம் கட்டச் சான்றிதழ் சரிபார்ப்பு முற்பகல் 08.30 மணிக்கும் / முதற்கட்ட கலந்தாய்வு முற்பகல் 10.00 மணிக்கும் சென்னை-3, TNPSC சாலையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 27.06.2018 அன்று நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு SMS, E-mail மற்றும் விரைவஞ்சல் மூலம், அழைப்புக் கடிதம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை எண் மற்றும் கணினிவழி விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு 1:2 என்ற விகிதத்தில் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பதவிகளுக்கான ஒதுக்கீடு, விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய தரவரிசை நிலை, இடஒதுக்கீட்டு விதி மற்றும் தகுதியுடைமை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் முறையை எட்டும் பொழுது அவரவர் இடஒதுக்கீட்டு பிரிவில் நிலவும் காலிப்பணியிடங்களைப் பொருத்தே அமையும். எனவே சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக உரிமை கோர இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு குறித்த நேரத்தில் வரத்தவறினால் ஒருங்கிணைந்த தரவரிசைப்பட்டியலில் தங்களின் வாய்ப்பை இழக்க நேரிடும் எனவும், அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments