வெயிட்டேஜ் தேர்வுமுறை ரத்து; புதிய நடைமுறை அமல் ஜூன் 14-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வைத் தனியாகவும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்துக்கு ஒரு போட்டித்தேர்வை தனியாகவும் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை முடிவு

வெயிட்டேஜ் தேர்வுமுறை ரத்து; புதிய நடைமுறை அமல் ஜூன் 14-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வைத் தனியாகவும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்துக்கு ஒரு போட்டித்தேர்வை தனியாகவும் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை முடிவு ஜெ.கு.லிஸ்பன்குமார் சென்னை அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமன முறையில் அதிரடி மாற்றம் கொண்டுவரப் படுகிறது. தற்போதைய வெயிட் டேஜ் முறை ரத்து செய்யப் படுகிறது. அதற்குப் பதிலாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலும் ஒரு போட்டித்தேர்வு நடத்தி அதன்மூலம் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் வெயிட் டேஜ் மதிப்பெண் முறை அடிப்படையில் நியமிக்கப் படுகிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கு 60 சதவீத வெயிட்டேஜும், பிளஸ் 2 மதிப்பெண், பட்டப்படிப்பு மதிப்பெண், பி.எட். மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர் என்றால் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண்) 40 சதவீத வெயிட்டேஜும் அளிக்கப்படுகிறது. இந்த முறையில், தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு ஆகியவற்றில் மதிப்பெண் குறைவாக எடுத்தி ருந்தால் அவர்கள் பணிவாய்ப்பை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. தகுதித்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த தேர்வர்கள் பிளஸ் 2, பட்டப் படிப்பு ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைத்தது. 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் போடப்படுவதில்லை என்றும் சமீப காலமாகவே பிளஸ் 2 தேர்வில் சுமாராக படிக்கும் மாணவர்கள் கூட 1000-க்கும் மேல் மதிப்பெண் பெறுகிறார்கள் என்றும், எனவே, மதிப்பெண் பாகுபாடு ஏற்படுத்தக்கூடிய வெயிட்டேஜ் முறையை கைவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்துவிட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமன முறையில் பள்ளிக் கல்வித் துறை அதிரடி மாற்றத்தைக் கொண்டுவர இருக்கிறது. அதன்படி, தற்போது நடைமுறையில் இருக்கும் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலும் ஒரு போட்டித்தேர்வு நடத்தி, அதன்மூலம் ஆசிரியர்களை தேர்வுசெய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் தொடர்பாக தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்திருந்தது. அதன்படி, தகுதித்தேர்வு என்பது ஆசிரியர்களின் பணிநியமன தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தேர்வு. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வேண்டி கோரிக்கை வைக்கிறார்கள். இதனால், தேவையற்ற சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. அச்சூழ் நிலையைக் களைய வேண்டு மானால் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப் போன்று ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது தகுதியை நிர்ணயிக்கும் தனித்தேர்வாகவும், பின்பு அரசு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு தனியாக ஒரு போட்டித் தேர்வு நடத்தி ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும் முறையைப் பின்பற்றலாம் என பரிந்துரை வழங்கியது. பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் பரிந்துரைகளை அரசு ஆய்வுசெய்தது. தற்போதைய நடைமுறையில் தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் வெயிட்டேஜ் மதிப்பெண் சேர்த்து அதன் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் தற்போது தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித்தகுதி மதிப்பெண்ணுடன் ஒப்பிடும்போது வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் வேறுபாடு காணப்படுகிறது. இதனால் சமவாய்ப்பு இல்லாத நிலை ஏற்படலாம் என்பது தொடர்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங் களில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. தகுதித் தேர்வுக்கும் பணிநியமனத்துக்கும் தனித்தனி தேர்வு நடத்தப்படுகிறது. வெயிட்டேஜ் முறையால் தகு தித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் மதிப்பெண்ணை உயர்த் திக்கொள்ள மீண்டும் மீண்டும் தகுதித்தேர்வு எழுதும் சூழல் ஏற்படுகிறது. மேலும், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் தேர்வர்கள் மத்தியில் ஏற்படுகிறது. இந்த நிலையில், பொதுப்பள்ளி வாரிய பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் கடந்த ஜூன் 14-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வைத் தனியாகவும், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்துக்கு ஒரு போட்டித்தேர்வை தனியாகவும் நடத்தலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தகுதித்தேர்வாகவும் (Qualifying Examination), அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் களைத் தேர்வுசெய்ய, உரிய கல்வித்தகுதியுடன், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலமாக தனியாக ஒரு போட்டித் தேர்வை (Competitive Exami nation) நடத்தி ஆசிரியர் தேர்வு செய்யும் முறையைப் பின்பற் றலாம் என முடிவு செய்து ஆணை யிடப்படுகிறது. இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

1 comment:

  1. Good, Those who are already passed TET qualifying exam in 2013 & 2017, Now what they will do. They are eligible for competitive exam or they will write TET again......

    ReplyDelete

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||