உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு முடிவுகள் 15-ம் தேதி வெளியாகிறது

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு (Dm, Mch) 1,215 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 200 இடங்கள் இருக்கின்றன. இந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (NEET-SS) கடந்த 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தியத் தேர்வை மருத்துவப் பட்டமேற்படிப்பு படித்துவிட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 50,000-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் எழுதியுள்ளனர். வரும் 15-ம் தேதி தேர்வு முடிவுகள் www.nbe.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்த உள்ளது.

Comments