எம்.இ., எம்.டெக். படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 17-ந் தேதி கடைசிநாள்

தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழக துறைகள், மண்டல அலுவலகங்கள், உறுப்புக்கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக். எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய
படிப்புகளுக்கான காலி இடங்கள் குறித்த தகவல்களை அந்தந்த கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சமர்ப்பித்துவிட்டன. இதனால் மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.an-n-au-n-iv.edu./tan-ca2018 என்ற இணையதளம் மூலம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 17-ந் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

Comments