தொழில் கல்வி மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு 18 முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது.

பிளஸ்-2 வகுப்பில் தொழில் கல்வி படித்த மாணவர்களுக்கு என்ஜினீயரிங் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்தனர். பொதுப்பிரிவினருக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடக்கிறது. ஆனால் சிறப்பு பிரிவினர் மற்றும் தொழில் கல்வி மாணவர்களுக்கு கலந்தாய்வு நேரில்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் கல்வி மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப நேரில் கலந்தாய்வு சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments