தொலைதூரக் கல்வியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் நேரடியாக எம்சிஏ 2-ம் ஆண்டு சேரலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் தொலைதூரக்கல்வி எம்சிஏ படிப்பில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சேரலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது: பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகளும் கணித பாடத்தை பிளஸ் 2 அளவில் அல்லது பட்டப் படிப்பில் படித்து ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் பிஜிடிசிஎஸ் (கம்ப்யூட்டர் டிப்ளமா) படிப்பு முடித்தவர்களும் 2018-2019-ம் ஆண்டிலிருந்து தொலைதூரக்கல்வி எம்சிஏ படிப்பில் நேரடியாக 2-வது ஆண்டு சேர தகுதியுடையவர் ஆவர்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் மாதம் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரிய வாய்ப்பு எனவே, தகுதியுடைய பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல்விவரங்களை தொலைதூரக்கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) இருந்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments