பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது.

ஆன்லைன் கலந்தாய்வு 25-ம் தேதி தொடங்குகிறது 5 அமர்வுகளாக நடைபெறும். பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது. 5 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 509 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. நடப்பாண்டு பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பொறியியல் படிப்புக்கு விண் ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், பொதுப்பிரி வினருக்கான ஆன்லைன் கலந் தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் நேற்று அறிவித்துள்ளார். இந்த கலந்தாய்வானது 5 அமர்வுகளாக நடைபெற உள்ளது. கலந்தாய்வு குறித்த கூடுதல் விவரங்களை www.tnea.ac.in என்ற இணையதளத் திலும், 1800 425 9779 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||