அரசு பள்ளிகளில் செப். 30 வரை மாணவர் சேர்க்கை தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலை யில், சேர்க்கையை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. நடப்பு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு வழங்கப் படும் 14 விதமான நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுவாக பள்ளிகளில் மாண வர் சேர்க்கை ஜூலை மாத இறுதியிலேயே நிறைவடைந்து விடும். கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்டு 31 வரை நீடிக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் செப்டம் பர் 30 வரை நீடிக்கப்பட்டது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டி லும் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை நீட்டிப் பைப் பயன்படுத்தி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், வட் டார கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத் தின்படி பள்ளிகளில் நவம்பர் 30 வரை மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||