உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கடைசி நாள் 31-ந் தேதி

சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன் முழு நேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் மற்றும் தமிழ் முதுகலை பட்ட படிப்பு ஆகியவற்றுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் 31-ந் தேதி. நுழைவுத்தேர்வு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பார்த்து (www.ula-k-at-ht-h-a-m-izh.org ) தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கோ.விசயராகவன் தெரிவித்துள்ளார்.

Comments