ஆசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு பி.ஏ.-பி.எட். 4 ஆண்டு பட்டப்படிப்பு அடுத்த ஆண்டு முதல் அமல்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மக்களவையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மசோதாவை தாக்கல் செய்தார். அதன் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பதில் அளித்தார். அப்போது, ஆசிரியர் ஆக விரும்புபவர்களுக்காக, அடுத்த ஆண்டு முதல், பி.ஏ.-பி.எட்., பி.எஸ்சி.-பி.எட். மற்றும் பி.காம்.-பி.எட். ஆகிய 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தொடங்கப்படும் என்று அவர் கூறினார். எனவே, 12-ம் வகுப்பு முடித்தவுடன் இந்த படிப்பில் சேரலாம் என்று அவர் கூறினார். ஏற்கனவே, பி.ஏ.-பி.எல். என்ற 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு இருப்பதுபோல், இந்த படிப்பு தொடங்கப்படுவதாக பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 15 லட்சம் வகுப்புகளில், கரும்பலகைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||