முதன்மை கல்வி அலுவலர்கள் 8 பேர் இடமாற்றம் | காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஜே.ஆஞ்சலோ இருதயசாமி நியமனம்.

முதன்மை கல்வி அலுவலர்கள் 8 பேர் இடமாற்றம் | காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்ப தாவது: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சிஇஓ) ஆர்.திருவளர்செல்வி மாற்றப்பட்டு சென்னை சிஇஓ-வாகவும் சேலம் சிஇஓ அ.ஞானகவுரி மாற்றப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும், திண்டுக்கல் சிஇஓ எஸ்.கோபிதாஸ் இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை சிஇஓ-வாகவும், நீலகிரி சிஇஓ எஸ்.செந்தில்வேல்முருகன் மாற்றப்பட்டு திருநெல்வேலி சிஇஓ-வாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் பாண்டியராஜா மாற்றப்பட்டு தொடக்கக் கல்வி துணை இயக்குநராகவும், சிவகங்கை சிஇஓ ஜே.ஆஞ்சலோ இருதயசாமி மாற்றப்பட்டு காஞ்சிபுரம் சிஇஓ-வாகவும், கரூர் சிஇஓ டி.கணேஷ்மூர்த்தி மாற்றப்பட்டு சேலம் சிஇஓ-வாகவும், மதுரை சிஇஓ எஸ்.மாரிமுத்து மாற்றப்பட்டு திருவாரூர் சிஇஓ-வாகவும் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Comments