கருணை மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் தடை..

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின்போது தமிழில் கேட்கப்பட்ட 49 வினாக்கள் தவறாக இருந்தன. இதனால், தவறான வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், ‘‘நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும். இந்த 196 மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு 2 வாரத்துக்குள் புதிதாக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு அதனடிப்படையில் கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும்’’ என கடந்த 10-ம் தேதி உத்தரவி்ட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதி்த்தது. மேலும், இந்த பிரச்சினையை எவ்வாறு சுமுகமாக தீர்ப்பது என்பது குறித்து இருதரப்பும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மனுதாரருக்கு நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||