மீன்வளப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையத்தில் வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை.யின் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை குழு தலைவர் முனைவர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: காஞ்சிபுரம் மாவட்டம், வாணியஞ்சாவடி பகுதியில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலை.யில் இளநிலை மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல், உயிர் தொழில்நுட்பவியல்(பி.டெக்) ஆகிய 4 ஆண்டு பட்டப் படிப்புகள் உள்ளன. மேற்கண்ட பாடப் பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்களிடமிருந்து இணையதளம் மூலம் பல்கலை. நிர்வாகம் விண்ணப்பங்களை பெற்றது. இதில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்காக 2,956 விண்ணப்பங்களும், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு 929, இளநிலை உயிர் தொழில்நுட்பவியல் பட்டப் படிப்புக்கு 527 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல் பல்கலை.யின் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இளநிலை மீன்வள அறிவியல் பிரிவுக்கு 141 இடங்களும், இளநிலை மீன்வளப் பொறியியல் பிரிவுக்கு 30 இடங்களும் மற்றும் இளநிலை உயிர் தொழில்நுட்பவியல் பிரிவுக்கு 40 இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு ஜூலை மாதம் 3-ம் வாரத்தில் நடைபெற உள்ளது.

Comments