மேல்நிலை வகுப்புகளில் பாடங்கள் மாற்றத்துக்கு ஒப்புதல் அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த கலைத்திட்ட வடிவமைப்புக்குழு மற்றும் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுக்கள் இந்த கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் கலைப்பிரிவுகளில் முதன்மைப் பாடப்பிரிவுகளின் பெயர்கள் மற்றும் முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ளன. இதற்கு பள்ளிக் கல்வி வாரியம் ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிட பள்ளிக்கல்வி இயக்குனர் கோரியுள்ளார். அதனை அரசு பரிசீலித்து, மேல்நிலைப் பாடப்பிரிவுகளில் முதன்மை பாடமான கணினி அறிவியல் பாடம், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மற்றும் கலைப்பிரிவுகளில் உள்ள முதன்மைப்பாடங்கள், வணிக கணிதமும் புள்ளியியலும், அறவியலும் இந்திய பண்பாடும், செவிலியம் பொது பாடப்பெயர்களை மாற்றம் செய்துள்ளமைக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. புதிய தொழிற்கல்வி மற்றும் கலைப்பிரிவு பாடப்பிரிவுகளின் பெயர் மற்றும் முதன்மைப் பாடங்களின் மாற்றம் இந்த கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்பிற்கும், அடுத்த கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்பிற்கும் நடைமுறைப்படுத்திட அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||