மீன்வள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

மீன்வளத் துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் மீன்வளத்துறை யில் 72 ஆய்வாளர் பணியிடங் களும் 12 உதவி ஆய்வாளர் பணியிடங்களும் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி 2018-ம் ஆண்டுக் கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் அறிவிக்கப் பட்டிருந்தது. தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அதற்கான எழுத்துத்தேர்வு ஜூலை 15-ம் தேதி நடத்தப் படும் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால், தேர்வுக் கான அறிவிப்பு இன்னும் வெளியிடப் படவில்லை. இதனால், வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை எதிர்பார்த்து அத்தேர்வுக்கு தயா ராகி வரும் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மீன் வளத்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை விட காலியிடங்களின் எண் ணிக்கை சற்று அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். மீன்வள ஆய்வாளர் தேர் வுக்கு பிஎப்எஸ்சி பட்டதாரிக ளும், எம்எஸ்சி விலங்கியல், எம்எஸ்சி மரைன் பயாலஜி பட்டதாரிகளும் விண்ணப்பிக் கலாம். மீன்வள உதவி ஆய் வாளர் தேர்வுக்கு பிஎப்எஸ்சி பட்ட தாரிகளும் பிஎஸ்சி விலங்கியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். மேலும், வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையின்படி, குரூப்-2 தேர்வுக்கான (நேர்முகத்தேர்வு உடைய பதவிகள்) அறிவிப்பு மே மாதம் முதல் வாரம் வெளி யிடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் 1547 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளனர். ஏற் கெனவே நடத்தப்பட்ட குரூப்-2ஏ (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வுக்கு கலந்தாய்வு பணிகள் முடிவடைந்ததும் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வெளி யிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) முதலிய பல்வேறு துறைகளில் சார்நிலைப்பணிகளில் அடங்கிய பதவிகள் குரூப்-2 தேர்வின்கீழ் வருகின்றன. குரூப்-2 தேர்வையும், குரூப்-2-ஏ தேர்வையும் தனித்தனியாக நடத் துவதால் தேவையில்லாமல் டிஎன்பிஎஸ்சி-க்கும் தேர்வு எழுது வோருக்கும் காலதாமதம் ஆவதால் முன்பு இருந்து வந்ததைப் போன்று ஒருங்கிணைந்த தேர்வாக நடத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குரூப்-4 தேர்வும் தற்போது ஒருங்கிணைந்த தேர்வாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||