யு.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தில் படிக்கும் பகுதிநேர மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு

யு.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தில் படிக்கும் பகுதிநேர மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு. சட்டசபையில் நேற்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர் திருத்தத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- * புதிதாக உருவாக்கப்பட்ட பயிற்சித்துறை தலைவர் அலுவலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கக்கூடிய பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள பணியிடங்களுக்கு பொதுவான சிறப்பு விதிகள் உருவாக்கப்படும். * பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதல் வசதிகள் மேம்படுத்தப்படும். * அகில இந்திய குடிமைப்பணி தேர்வு (யு.பி.எஸ்.சி.) பயிற்சி மையத்தில் படிக்கும் பகுதிநேர மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதுடன், இலவச உணவு வழங்கப்படும். * அண்ணா மேலாண்மை நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். * ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையகத்தில் இணையதள குற்ற ஆய்வுக்கூடம் மற்றும் விசாரணை அறை அமைக்கப்படும். திருவள்ளூர், திருவாரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments