தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகை யில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் 22 பேர் இவ்விருதுக்கு தேர்வுசெய்யப்படுகிறார்கள். இந்த நிலையில், 2017-ம் ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காலக்கெடுவை ஜூலை 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, தகுதியுடைய ஆசிரியர்கள் www.nationalawardtoteachers.com என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஜூலை 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ் வர முருகன் அறிவுறுத்திஉள்ளார்.

Comments