அரசு பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தும் குழு குலுக்கல் முறையில் தேர்வு அரசுபணியாளர் தேர்வாணையம் முடிவு

தமிழக அரசில் உள்ள துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. துணை கலெக்டர், துணைபோலீஸ் சூப்பிரண்டு, வணிகவரித்துறை உதவி ஆணையர், மாவட்டபதிவாளர் , மாவட்டவேலை வாய்ப்பு அதிகாரி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அதிகாரி உள்ளிட்ட குரூப்-1 தேர்வு, குரூப்-2 தேர்வு, குரூப்-4 தேர்வு, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல தேர்வுகளை அந்த தேர்வாணையம் நடத்தி வருகிறது. தேர்வுகளில் சிலவற்றுக்கு நேர்முகத்தேர்வு உண்டு. அந்ததேர்வுக்கு புதிய நடைமுறையை பின்பற்ற அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்து உள்ளது. அதன்படி நேர்முகத்தேர்வு நடத்தும் குழுவை நேர்முகத்தேர்வு நடைபெறும் அன்று தேர்வர்கள் வந்தபிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்ய இருக்கிறது. நேர்முகத்தேர்வில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. எந்த தேர்வரிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்போகிறோம் என்று அதிகாரிகளாலும் அறிந்து கொள்ள முடியாது. எந்த அதிகாரியிடம் நேர்முகத்தேர்வுக்கு செல்லப்போகிறோம் என்று தேர்வர்களாலும் தெரிந்து கொள்ள முடியாது. இதற்காக நேர்முகத்தேர்வு நடத்தும் குழுவை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

Comments